இந்தியா
5 வருடத்திற்கு மின்சார கட்டணம் இல்லை… அமித்ஷா அறிவிப்பு….

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.
எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது. ஒருபக்கம், இரண்டு கட்சிகளும் அதை செய்வோம், இதை செய்வோம் என தேர்தல் அறிக்கைகளை வெளியிட துவங்கி விட்டனர்.
மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பல வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றனர். ஏற்கனவே, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாளில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மேலும், கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் என பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் அடுத்த 5 வருடங்கள் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.