Connect with us

வணிகம்

Appraisal வந்தாலும் In-Hand Salary குறையுமா? புதிய Labour Code என்ன மாற்றம் கொண்டு வருகிறது?

Published

on

வருடாந்திர appraisal பிறகு சம்பளம் உயரும் என எதிர்பார்க்கும் ஊழியர்களுக்கு, புதிய labour code காரணமாக மாதாந்திர in-hand salary குறைய வாய்ப்பு இருப்பதாக நிதி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சம்பள அமைப்பில் (salary structure) நிறுவனங்கள் மாற்றம் செய்தால் PF உள்ளிட்ட ஓய்வூதிய சேமிப்பு பங்களிப்புகள் அதிகரிக்கலாம். இதன் விளைவாக ஊழியர்களின் take-home salary குறையக்கூடும் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.

Basic Salary அதிகமானால் என்ன ஆகும்?

Pankaj Mathpal கூறுகையில், “ஒரு ஊழியரின் basic salary component அதிகமாக இருந்தால், Provident Fund (PF) பங்களிப்பும் அதிகரிக்கும். ஏனெனில் employee மற்றும் employer PF contribution இரண்டும் basic pay அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது” என்றார்.

இதனால் மாதந்தோறும் சம்பளத்தில் PF பிடித்தம் அதிகரித்து, கையில் வரும் சம்பளம் குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில், நிறுவனங்கள் சம்பள திருத்தம் மூலம் இந்த பாதிப்பை சமநிலைப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறையும் In-Hand Salary… ஆனால் அதிகரிக்கும் ஓய்வூதிய சேமிப்பு

உடனடி take-home salary குறைந்தாலும், நீண்டகால நிதி பாதுகாப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“PF contribution அதிகமானால், ஓய்வூதிய காலத்தில் கிடைக்கும் retirement corpus பெரிதாகும். அதனால் தற்போதைய கையிலான வருமானத்தையும், எதிர்கால சேமிப்பையும் சேர்த்து பார்க்க வேண்டும்” என்று பங்கஜ் மாத்பால் விளக்கினார்.

ஏன் Salary Structure மாறலாம்?

Vishwajeet Parashar கூறுகையில், பல நிறுவனங்கள் இதுவரை basic salary-யை குறைவாக வைத்துக் கொண்டு HRA மற்றும் allowances மூலம் சம்பளத்தை வழங்கி வந்தன என்றார்.

“முன்பு பல நிறுவனங்களில் basic pay மொத்த CTC-யின் 20% முதல் 30% வரை மட்டுமே இருந்தது. மீதமுள்ள தொகை allowances மூலம் வழங்கப்பட்டது. இதனால் PF contribution குறைவாக இருந்தது” என்று அவர் கூறினார்.

ஆனால் புதிய labour code படி basic salary பகுதி அதிகரித்தால் PF deduction கூடும்.

ரூ.1 லட்சம் சம்பளம் எடுத்துக்காட்டு

உதாரணமாக, மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறும் ஒருவரின் basic salary குறைவாக இருந்தால் PF deduction குறைவாக இருக்கும். ஆனால் புதிய அமைப்பில் basic pay அதிகரித்தால் PF பிடித்தமும் உயரும்.

இதனால் short-term-இல் in-hand salary குறைந்தாலும், long-term-இல் PF சேமிப்பு மற்றும் gratuity தொகை அதிகரிக்கும்.

CTC மற்றும் In-Hand Salary – இரண்டுக்கும் வித்தியாசம்

பல ஊழியர்கள் CTC-யை பார்த்து actual salary அதிகரித்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால் CTC முழுவதும் கையில் வராது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Employer PF contribution, health insurance, meal vouchers, bonus, incentives போன்றவை அனைத்தும் CTC-யில் சேர்க்கப்படும்.

அதனால் bank account-க்கு வரும் actual salary என்ன என்பதை employees கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tax Regime தேர்வும் முக்கியம்

பழைய tax regime பயன்படுத்துபவர்களுக்கு salary structure மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

HRA, LTA, meal allowance போன்றவை வரிச்சலுகை தரக்கூடும். ஆனால் அவை salary structure-இல் இருந்தால் மட்டுமே அந்த நன்மைகள் கிடைக்கும்.

அதே சமயம், குறைந்த deductions உள்ள இளம் ஊழியர்களுக்கு புதிய tax regime சுலபமானதாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Appraisal பிறகு Employees கவனிக்க வேண்டியவை

புதிய salary structure-ஐ பார்க்கும்போது ஊழியர்கள் பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • Basic salary component
  • Employee மற்றும் Employer PF contribution
  • HRA மற்றும் allowances
  • Gratuity calculation
  • Variable pay மற்றும் incentives
  • Tax deduction details
  • Actual monthly in-hand salary

CTC அதிகரித்தாலே கையில் வரும் சம்பளமும் அதிகரிக்கும் என்பது அவசியமில்லை. அதனால் appraisal பிறகு salary breakup-ஐ முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Translate »