சினிமா செய்திகள்
உலகப்புகழ் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ சீசன் 5 ட்ரெய்லர் வெளியீடு..!

உலகப்புகழ் பெற்ற வெப் சீரிஸ் ஆன மணி ஹெய்ஸ்ட் 5-ம் பாகத்திந் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஸ்பானிஷ் மொழியில் உருவாகி உலகெங்கும் இருக்கும் பல மொழிகளில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். இந்த சீரிஸ் முதன்முதலில் 2017-ம் ஆண்டு வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த சீரிஸில் இதுவரையில் நான்கு பாகங்கள் வெளியாகி அத்தனையும் ஹிட் அடித்தது.
இந்த சீரிஸில் நடித்த அத்தனை முக்கியக் கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியே ரசிகர்கள் உலகம் முழுவதும் ஆர்மிகள் தொடங்கி உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த சீரிஸின் 5-ம் பாகம் வெளிவர உள்ளது. இந்த ஐந்தாம் பாகத்தின் முதல் பாதிக்கான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஐந்தாம் பாகத்தின் முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும் இரண்டாம் பகுதி டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. ஸ்பையினின் கொள்ளை கும்பல் மற்றும் காவல்துறைக்கு இடையே நடக்கும் போராட்டக் களம் தான் படத்தின் கதையாக உள்ளது.