இந்தியா
இந்தியாவின் மிக மோசமான நகரம் இதுதான்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ஆதங்கம்..!

இந்தியாவின் மிக மோசமான நகரம் தலைநகர் புதுடெல்லி தான் என இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி டெல்லியில் ஒழுக்கமின்மை மிக அதிகமாக இருப்பதாகவும் மிகவும் சங்கடமாக அதை உணர்கிறேன் என்றும் இந்தியாவின் மிக மோசமான நகரங்களில் டெல்லியில் ஒன்றும் என்றும் அவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவர் இது குறித்து கூறிய போது ’நேற்று நான் டெல்லி விமான நிலையத்திலிருந்து காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சிவப்பு விளக்கு சிக்னலை மதிக்காமல் சென்று கொண்டிருந்தன என்றும் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடியாத இவர்கள் வேறு எதற்காக காத்திருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

narayana murthi
ஒரே ஒரு நிமிடம் சிக்னலை மதித்து காத்திருந்தால் அவர்களுக்கும் நல்லது, உடன் பயணம் செய்ய மற்றவர்களுக்கும் நல்லது என்றும் சிக்னலை மீறி சென்றால் விபத்து நடக்கும் என்று தெரிந்தும் கூட இவ்வாறு விதிமுறைகளை மீறுவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் எழுப்பி இருந்தார்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஆந்திராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி பேசியபோது ’இந்தியாவைப் பொறுத்தவரை ஊழல், அசுத்தமான சாலைகள், மாசு ஆகியவை எதார்த்தமாக மாறிவிட்டது என்றும் ஆனால் சிங்கப்பூரில் சுத்தமான சாலை, மாசு இல்லாத சுற்றுச்சூழல் மற்றும் அதிக சக்தி ஆகியவை தான் எதார்த்தம் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மாதிரி இந்தியாவில் புதிய எதார்த்தத்தை உருவாக்குவது மாணவர்களின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார். சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் பக்குவத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும் என்றும் தாங்கள் சொந்த நலனுக்கு மேலாக பொதுமக்கள் சமூகம் மற்றும் தேசத்தின் நலனை முதன்மைப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வறுமையை நீக்குவதற்கு வசதி குறைவானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது ஒரே தீர்வு என்றும் மாணவர்கள் முடிந்தவரை தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.