வணிகம்
கொரோனாவால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட அம்பானி!

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 12 இடங்கள் பின் தள்ளப்பட்டு 21 வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் லட்சம் கோடிகள் அளவில் சரிவைச் சந்தித்தது. அதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
எனவே, ஃபோஃப்ஸ் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 9வது இடத்திலிருந்த முகேஷ் அம்பானி 12 இடங்கள், பின் தள்ளப்பட்டு 21வது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானி மட்டுமல்லாமல், உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உட்படப் பலரின் சொத்து மதிப்புகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில், இந்தியாவிலிருந்து இடம்பெற்றவர்களில் டீமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தாமனி இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 13.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அம்பானி மற்றும் ராதாகிஷன் தாமனியை தொடர்ந்து, ஷிவ் நாடார், உதய் கோடாக், கவுதம் அதானி உட்பட 9 இந்தியர்கள் உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

















