வீடியோ
எல்லாருக்கும் அவன பிடிக்கும்; especially kids-க்கு; சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் டீசர்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் டிரெயலர் இன்று வெளியாகியுள்ளது.
வேலைக்காரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மே 17-ம் தேதி திரைக்கு வர உள்ள படம் மிஸ்டர் லோக்கல். இவர்களுடன் யோகிபாபு, ராதிகா சரத்குமார், சத்தீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். ராஜேஷ் இயக்கியுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் இல்லாமல் இந்த படம் உருவாகியுள்ளது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கோஜால் நடித்திருந்த கதாபாத்திரம் போல ஒரு பவர் ஃபுல் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் வில்லி கிடையாது. சிவகார்த்திகேயன் துரத்தி காதல் வலை வீசும் நாயகியாக நயன் வருகிறார்.
தற்போதைக்கு மிஸ்டர் லோக்கல் டிரெய்லரை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்.