தமிழ்நாடு
இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும்.
வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.