உலகம்
வெற்றிக்கு பின் கணவருக்கு முத்தம் கொடுத்த மெஸ்ஸி மனைவி: செம ரொமான்ஸ் புகைப்படங்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மெஸ்ஸிக்கு அவரது மனைவி முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது என்பதும் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் வென்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவின் வெற்றியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் மெஸ்ஸி குடும்பத்தினரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உலகக்கோப்பையை கையில் ஏந்தியபடி மெஸ்ஸி குடும்பத்தினர் இருக்கும் புகைப்படம், மெஸ்ஸிக்கு அவரது மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம், மெஸ்ஸி குழந்தைகள் உலக கோப்பையை கையில் வைத்து கையை தூக்கி கொண்டிருந்த புகைப்படம் உள்பட ஏராளமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் நாயகனாக மெஸ்ஸிக்கு அவரது மனைவி முத்தம் கொடுத்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்க அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகக்கோப்பை போன்று மேலும் பல கோப்பைகளை அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி பெற்றுத்தர வேண்டும் என அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.