பிற விளையாட்டுகள்
எம்.எஸ்.தோனி மகளுக்கு மெஸ்ஸி கொடுத்த மறக்க முடியாத பரிசு.. வைரல் புகைப்படங்கள்!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, தல தோனியின் மகள் ஜிவாவுக்கு அனுப்பிய மறக்க முடியாத பரிசு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின என்பதும் அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸியின் அபார ஆட்டம் காரணமாக அந்த அணி கோப்பையை வென்றது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாயகனாக மெஸ்ஸிக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தல தோனி தற்போது கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருந்தாலும் அவர் சிறு வயதில் தான் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக தான் ஆக வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். குறிப்பாக அவருக்கு கோல் கீப்பராக வேண்டுமென்றுதான் கனவு இருந்தது. ஆனால் காலம் அவரை கிரிக்கெட் பக்கம் கொண்டு சென்றது என்பதும், கிரிக்கெட்டிலும் அவர் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் மிகப்பெரிய சாதனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தந்தை தோனி போலவே மகள் ஜிவாவும் கால்பந்து ரசிகை என்பது பலருக்கு தெரிந்திராத உண்மை. அந்த வகையில் தோனியின் 7 வயது தோனியின் மகள் ஜீவா சிங் தோனிக்கு அர்ஜென்டினா ஜெர்ஸியை கையொப்பமிட்டு லியோனல் மெஸ்ஸி அனுப்பி உள்ளார். இந்த ஜெர்ஸியை அணிந்து ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
’அப்பாவை போல மகளைப் போல’ என்ற கேப்ஷனுடன் ஜிவா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை போலவே மகளும் கால்பந்து ரசிகையாக இருப்பது மட்டுமின்றி மெஸ்ஸிக்கும் ரசிகையாக இருக்கிறார் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
https://www.instagram.com/p/CmrNmvUIzr2/