Connect with us

சினிமா

சேரன் என் வயிற்றில் கை வைத்தார்: பிக் பாஸில் கேவலமாக நடந்துகொண்ட மீரா!

Published

on

பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடந்து வருகிறது. மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் கலந்துகொண்டுள்ளார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சேரனுக்கும், மீரா மிதுனும் இடையே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. மீரா எப்பொழுதும் சேரன் மீது ஏதாவது குறை கண்டுபிடித்து அவர் மீது குற்றம் சுமத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மீரா அதன் எல்லைக்கே சென்று சேரம் மீது அபாண்டமாக ஒரு பழியை போட்டுள்ளார்.

நேற்று நடந்த டாஸ்கின் போது சேரன் எதிர்பாராத விதமாக மீராவை சற்று தள்ளி லாஸ்லியாவின் கையில் இருந்த பொருளை பறிக்க முயல்கிறார். ஆனால் அதனை மீரா மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக மாற்றிவிட்டார். சேரன் தன்னை மிக கொடூரமாக கையாண்டதாகவும், அவர் என்னுடைய வயிற்றில் கையை வைத்து என்னை அப்படியே தூக்கி வீசியதாகவும், அது ஆக்ரோஷமாக இருந்ததாகவும், அதில் தவறான எண்ணம் இருந்ததாகவும் அடுக்கடுக்காக சேரன் மீது கழங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மீரா குற்றம் சாட்டினார்.

இதனால் பிக் பாஸ் வீடு நேற்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அந்த வீடியோவை திரும்ப பார்க்கும் போது மீரா சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. சேரன் சாதரணமாக மீராவை சற்று மெதுவாக ஒதுக்கிவிட்டு லாஸ்லியாவிடம் உள்ள பொருளை கைப்பற்ற முயல்கிறார். இதில் மீரா சொன்னது போல எந்த செயலிலும் சேரன் ஈடுபடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் மீராவின் மிக வக்கிரமான இந்த குற்றச்சாட்டால் மனமுடைந்த சேரன் தனது குடும்பத்தை நினைத்து அழுதுவிட்டார். செய்யாத தவறுக்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் மீரா இந்த விஷயத்தை விடாமல் பெரிதாக்கி கொண்டிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மீரா மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரத்தில் கமல் இது தொடர்பான குறும்படத்தை போட்டுக்காட்டி மீராவின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?