தமிழ்நாடு
ஒரே ஒரு ஓட்டு கூட வாங்காத மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் வரை திமுக 260 மாநகராட்சி வார்டுகளிலும் 1192 நகராட்சி வார்டுகளிலும் 1784 பேரூராட்சி வார்டுகளிலும் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதிமுக மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகள் ஆகியவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது என்பதும் இதற்காக கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரே ஒரு வாக்கு கூட பெறவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
வேட்பாளர் செங்கோல் ஓட்டு மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓட்டு கூட அவருக்கு பதிவாகாமல் இருந்தது மிகப்பெரிய அதிசயம் தான் என்று அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


















