Connect with us

சினிமா செய்திகள்

நன்றி அண்ணா! சீமானுக்கு நன்றி தெரிவித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்!

Published

on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ‘மாநாடு’ படத்தை பாராட்டி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கைக்கு நன்றி என ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தைப் பாராட்டி சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.

மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்க கலைப் படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட் பிரபு. இஸ்லாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிற போக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறான பிம்பத்தை தகர்த்தெறியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மிகச் சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட் பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம் கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல் மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரை பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறை கொள்கிறேன். அவரது உயரத்தை எண்ணி மனமகிழ்வடைகிறேன்.

அன்புச் சகோதரர் எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத் திறனாலும் படத்தையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன். தம்பி யுவன் ஷங்கர் ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீனின் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்த படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்று காட்டி, வெற்றிப் படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்.

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம் பூரிப்பு அடைகிறேன். நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்11 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.