சினிமா செய்திகள்
ஜூலை 10ல் ஆரம்பித்து ஜூலை 10ல் முடிந்த ‘மாநாடு’ படப்பிடிப்பு: சுவாரஸ்ய தகவல்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து நேற்று கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி அறிவிப்பு செய்யப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு அதே ஜூலை 10 ஆம் தேதி படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது சுவராசியமான தகவல் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி ‘மாநாடு’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த போதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2019ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இடையில் ஒரு சில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தொடங்கவில்லை. மேலும் சிம்பு படப்பிடிப்புக்கு உறுதியாக வருவார் என்று அவரது தாயார் நேரடியாக படக்குழுவினரிடம் உறுதி அளித்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கி ஒரு சில மாதங்களில் திடீரென கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டதால் சுமார் ஆறு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பின் மீண்டும் ஜெட் வேகத்தில் படப்பிடிப்பு தொடங்கினாலும் திடீரென இரண்டாவது அலை காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தாமதமானது. இதனை அடுத்து தற்போதுதான் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 84 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னரே அதாவது 68 நாட்களிலேயே வெங்கட்பிரபு இந்த படத்தை முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 54 நாட்கள் சிம்பு நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று படப்பிடிப்பின் இறுதி நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய ‘மாநாடு’ படக்குழுவினர் 300 பேர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை சிம்பு பரிசளித்துள்ளார். வெங்கட் பிரபுவுக்கு மட்டும் ஸ்பெஷலான வாட்சை பரிசாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்கில் தான் முதலில் வெளியாகும் என்றும் திரையரங்குகள் எப்போது திறக்கின்றதோ அதன்பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


















