Connect with us

இந்தியா

ஹிண்டன்பர்க் விவகாரம்: அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்க எல்.ஐ.சி முடிவு, முதலீட்டை திரும்ப பெறுமா?

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளது என்பதும் அதனால் அதானி குழுமத்தில் அதிக அளவு முதலீடு செய்த எல்ஐசி நிறுவனம் விளக்கம் கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி விரைவில் அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்துடனான சந்திப்பை உறுதி செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்திற்கு ஏற்படும் நெருக்கடி குறித்து தெளிவுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதானி குழுமம் உயர்மட்ட நிர்வாகத்துடன் நடக்கும் இந்த சந்திப்பை எல்ஐசி தலைவர் எம்ஆர் குமார் உறுதிப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை அதானி குழுமம் எப்படி நிர்வாகம் செய்கிறார்கள் என்பதை நேரில் கேட்க இருப்பதாகவும், எங்கள் முதலீட்டாளர்கள் குழு ஏற்கனவே அதான இடம் விளக்கம் கேட்டிருந்தாலும் தற்போது அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக எங்கள் உயர்மட்ட நிர்வாகம் அதானி குழுமத்தின் நிர்வாகிகளை சந்தித்து விளக்கம் கேட்க உள்ளதாகவும் விரைவில் இந்த சந்திப்பு நடக்கும் என்றும் எம்ஆர் குமார் உறுதி செய்துள்ளார்.

மேலும் அதானி குழும நிர்வாகிகள் எங்களை சந்தித்து அதானி குழுமத்தில் என்ன நடக்கிறது? சந்தை குழுவில் என்ன நடக்கிறது என்பதை விளக்க தயாராக இருக்கின்றார்கள் என்றும் முழு நெருக்கடியையும் அவர்கள் எவ்வாறு நிர்வாகிக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் எங்களுடைய பாலிசிதாரர்களுக்கு விளக்கம் அளிப்போம் என்றோம் எல்ஐசி தலைவர் எம்ஆர் குமார் தெரிவித்துள்ளார்.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசியின் முதலீடு குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சிகள் மற்றும் முதலீட்டாளர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளராக இருக்கும் எல்ஐசி, பட்டியலிடப்பட்ட பெரும்பாலான அதானி குழும நிறுவனங்களில் இரண்டாவது பெரிய பங்குதாரராக உள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 36,474.78 கோடி மொத்த முதலீட்டில் உள்ளது. இது சதவீத அடிப்படையில் மொத்த பொது பங்குகளில் 4.23 சதவீதமாகும். .

ஜனவரி 27 நிலவரப்படி, இந்த முதலீட்டின் மதிப்பு ரூ. 56,000 கோடியாக இருந்தது என எல்ஐசி கூறிய நிலையில் இந்த பங்குகள் மேலும் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலீடுகள் குறைந்து வருவது குறித்து எமார் குமார் கூறியபோது, ‘எங்கள் முதலீடுகள் இன்னும் பச்சை நிறத்தில் உள்ளன, மேலும் பங்கு அல்லது கடனுக்காக நாங்கள் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அந்த நிறுவனங்களின் மொத்த பொதுப் பங்குகளில் 4.23 சதவிகிதம் எங்களின் பங்குப் பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?