சினிமா
எனது செங்கோலை வைத்து விஜய் சர்கார் அமைக்கட்டும் – வருண்!

சர்கார் படம் தன்னுடைய கதை என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் என்கிற ராஜேந்திரன். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சன்பிக்சர்ஸ் தங்களிடம் சமரசம் செய்துவிட்டதாக வருணின் வழக்கறிஞர் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இதுகுறித்து பேட்டியளித்த வருண், டைட்டிலில் எனது பெயர் போடுவதாக கூறியதால், எனது வழக்கை வாபஸ் பெற்றேன் என்றார். மேலும், படத்தை தடை செய்ய நினைக்கவில்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன். பாக்யராஜ் சாருக்கு எனது நன்றிகள் என்றார். விஜய் சர்கார் அமைக்க விஜய் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தீபாவளி பரிசாக எனது செங்கோலை அளிக்கிறேன் என்றார்.





















