சினிமா
’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

’லியோ’ படத்தின் அப்டேட் குறித்து கெளதம் மேனன் பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டப் பலர் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னையில் இதன் பூஜை நடந்து முடிந்ததும், படக்குழு மொத்தமும் காஷ்மீர் சென்றது. ஒருமாதமாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்த இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் முடிவடைந்தது.
காஷ்மீர் ஷெட்யூலை அடுத்து, விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது. கடந்த வாரத்தில் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய கெளதம் மேனன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கிருந்த ரசிகர்கள் ‘லியோ’ படத்தின் அப்டேட் குறித்து கேட்க கெளதம் மேனன் அதுபற்றி பகிர்ந்திருப்பதாவது, “’லியோ’ படம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் எனத் தெரியும்.
அதுபற்றி லோகேஷ் கனகராஜ் எதுவும் சொல்லக்கூடாது எனக் கறாராகத் தெரிவித்து இருக்கிறார். அதனால், அதுகுறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயம் நான் சொல்ல முடியும். படம் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. விரைவில் சென்னையில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது” எனத் தெரிவித்தார்.