சினிமா
’தளபதி 67’ படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு..!

விஜய் நடித்து வரும் 67வது படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த டைட்டில் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தின் வீடியோ ஒன்று பட வெளியிட்டிருக்கும் முன்னர் வெளியானது போல் ’தளபதி 6’7 படத்தின் வீடியோவும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வீடியோ இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் தான் ’தளபதி 67’ படத்தின் டைட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 67’ படத்திற்கு ’லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு நிமிடங்களுக்கும் மேல் உள்ள இந்த வீடியோவில் விஜய்யின் ஆவேசமான காட்சி மற்றும் கார்கள் அடுத்தடுத்து வரும் காட்சி ஆகியவை உள்ளது என்பதும் வீடியோவின் இறுதியில் ‘பிளடி ஸ்வீட்’ என்று விஜய் கூறும் வசனமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் அனிருத் இந்த வீடியோவுக்கு பின்னணி இசையை பட்டையை கிளப்பி உள்ளார் என்பது இந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’தளபதி 67’ படத்தின் டைட்டில் குருதிப்புனல் என்றும் குருதி என்றும் கழுகு என்றும் பல்வேறு விதமான யூகங்கள் வெளியான நிலையில் தற்போது ’லியோ’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் பான் இந்திய படம் என்றும் இந்த படம் வரும் அக்டோபர் 19 அன்று ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.