சினிமா
என்னது லியோ காபி தூளா? தளபதி 67ஏ கெத்தா இருந்துச்சே.. லியோ ப்ரோமோ எப்படி?

தளபதி விஜய்யின் 67வது படத்திற்கு தாறுமாறாக டைட்டில் 7 லெட்டர்ல வரப் போகுது என ரூமர்கள் பரவிய நிலையில், ரசிகர்கள் ஏகப்பட்ட டைட்டில்களை யோசித்து வந்தனர் கடைசியில் LEO என்கிற டைட்டிலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார்.
மேலும், அட்டகாசமான ப்ரோமோ வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பையும் வெளியிட்டு இதற்கு மேல் தனியாக அப்டேட் கேட்காதீங்க பாஸ் என சொல்லாமல் சொல்லி உள்ளனர்.

#image_title
இந்த ஆண்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்களின் டிரைலர் வெளியான போது கூட ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருவரும் போட்டா போட்டி போட்டு ரசிகர்களை கடுப்பேற்றிய நிலையில், லோகேஷ் கனகராஜ் சொன்ன தேதியில் படத்தை முடித்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ டைட்டில் எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. மேலும், லியோ காபி தூளா என அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் ஆக்ரோஷமான ரியாக்ஷனை எல்லாம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மரண பங்கம் பண்ணி வருகின்றனர்.

#image_title
சாக்லேட் ஃபேக்டரி மற்றும் வாள் உருவாக்குவது என இன்ட்ரோ ப்ரோமோ வீடியோவே வித்தியாசமாக உள்ளது. கடைசியில் சாக்லேட்டுக்குள் கத்தியை விட்டு எடுத்து அதை ருசித்து பிளடி ஸ்வீட் என விஜய் சொல்லும் காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கின்றன. பின்னணியில் அனிருத் வேறலெவலில் ஆங்கில பாடல் ஒன்றை போட்டுத் தாக்கி உள்ளார்.
அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் மற்றும் மேத்யூ தாமஸ் நடிக்கும் லியோ படம் வெளியாக உள்ளது.