சினிமா செய்திகள்
24 மணி நேரம்… 10 கோடி வியூஸ்… ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கிய கே.ஜி.எஃப்!

2018 ஆம் ஆண்டு, கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் ‘கே.ஜி.எஃப்’. கன்னட நடிகர், யஷ் நடித்த இந்தப் படம், 5 பாகங்களாக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, யஷ்ஷின் பிறந்தநாளையொட்டி, கே.ஜி.எஃப் படக்குழு, “கே.ஜி.எஃப் – சேப்டர் 2” டீசரை வெளியிட்டது. இந்த காணொலி, யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி வியூஸ்களை கடந்து, பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
Thank you.. ???? pic.twitter.com/XpHChGiCVD
— Yash (@TheNameIsYash) January 9, 2021
இப்படி ஏகோபித்த ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து யஷ், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் அன்பு மூலம் எனக்கு இன்று மிகச் சிறந்த நாளாக மாறியுள்ளது. நன்றி. லவ் யூ ஆல்…’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஆண்டு நடுவாக்கில் கே.ஜி.எஃப் 2 வெள்ளித்திரையைத் தெறிக்கவிட ரிலீஸ் செய்யப்படும்.
டீசர் வீடியோ: