சினிமா செய்திகள்
மிரளவைக்கும் கார்த்தியின் ‘சுல்தான்’ பட டிரெய்லர்!

கைதி, தம்பி வெற்றிக்குப் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘சுல்தான்’. இந்தப் படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் சுல்தான் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது அதன் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கில் மிகப் பிரபலாம உள்ள கதாநாயகி ராஷ்மிகா, முதன் முறையாக தமிழில் ‘சுல்தான்’ மூலம் அறிமுகமாகிறார். வெற்றிப் படங்களை கொடுப்பதில் பெயர் பெற்ற டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் சுல்தான், திரையரங்குகளில் வெளியாகிறது. வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழில் பெரிய ஹீரோ ஒருவரின் திரைப்படம் ரிலீஸாக உள்ளதால் கோலிவுட் வட்டாரத்திலும் எதிர்பார்க்கு எகிறியுள்ளது.