சினிமா செய்திகள்
கார்த்தியின் ‘சுல்தான்’ படம் எப்படி? முதல் காட்சி பார்த்தவர்களின் விமர்சனம்
Published
2 years agoon
By
Shiva
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘சுல்தான்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தமிழகம் தெலுங்கானா ஆந்திரா உள்பட இந்தியா முழுவதிலும் மற்றும் உலக நாடுகளிலும் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்ததை அடுத்து இந்த படம் ரசிகர்களின் மனதை கவரும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை இந்த படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்
இந்த படத்தின் கதைப்படி கார்த்தியின் கேரக்டர் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய நடிப்பு படம் முழுவதும் சூப்பராக இருப்பதாகவும் அவர் ஒருவரே படத்தை தனது தோளில் தாங்கிக் கொண்டு செல்வதாகவும் கூறி உள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் மிகவும் வீக்காக இருப்பதாகவும் குறிப்பாக வில்லன் கேரக்டர் ரொம்ப சுமாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
மேலும் காமெடி பகுதிகள் படத்தின் வேகத்தை குறைக்கிறது என்றும் சிரிப்பு வராத காமெடி காட்சிகள் எரிச்சல் அடைய செய்வதாகவும் கூறியுள்ளனர். மேலும் விவேக் மெர்வின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் முதல் 15 நிமிடம் மற்றும் இன்டர்வல் பிளாக் ஆகிய காட்சிகள் படத்தின் ஹைலைட்டான காட்சிகள் என்றும் தெரிவித்துள்ளனர்
மேலும் கமர்ஷியலாக பல விஷயங்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளது படத்தின் வேகத்தைக் குறைப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி மிகவும் சுமாராக இருப்பதாகவும் டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்ப்பை பெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
You may like
’துணிவு’: வங்கி கொள்ளையில் இவ்வளவு விஷயம் சொல்ல முடியுமா? அஜித்தை வைத்து மாஸ் செய்த எச் வினோத்!
வங்கிகள் செய்யும் அட்டூழியங்களை மணி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் தட்டிக்கேட்பதே துணிவு – டிவிட்டர் விமர்சனம்!
52 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸான ‘அவதார் 2’ எப்படி இருக்கு? டுவிட்டர் விமர்சனம்!
ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தது: ‘விக்ரம்’ படம் குறித்து கார்த்டி
விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!
லிங்குசாமியின் அடுத்த படம் ‘பையா 2’: ஆனால் கார்த்தி இல்லையாம்!