வீடியோ
மீண்டுமொரு இந்து – இஸ்லாமிய காதல் கதை.. கலங்க் ட்ரெய்லர் ரிலீஸ்!

ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், வருண் தவான், ஆதித்யா ராய், சஞ்சய் தத், ஆலியா பாட், சோனாக்ஷி சின்ஹா மற்றும் மாதுரி தீக்ஷித் நடிப்பில் உருவாகியுள்ள கலங்க் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி உள்ளது.
இயக்குநர் அபிஷேக் வர்மன், இந்து – இஸ்லாமிய காதலை மையமாக வைத்து பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் தான் கலங்க். படத்தின் கதையை ட்ரெய்லரிலேயே மிகத் துல்லியமாக கணிக்கும்படி எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆதித்யா ராய்க்கும், சோனாக்ஷி சின்ஹாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. சோனாக்ஷி சின்ஹா மீது ஆதித்யா ராய்க்கு, காதல் ஏற்படாததால், ஆலியா பாட்டை மணக்கிறார்.
ஆனால், ஆலியா பாட்டுக்கும், இஸ்லாமிய இளைஞரான வருண் தவானுக்கும் காதல் மலர்கிறது.
அந்த காதல், மதக்கலவரத்தை தூண்டுகிறதா? அல்லது இரு மனங்களும் ஒன்றிணைகிறதா என்ற ரீதியில் இந்த படம் உருவாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 17-ம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தை கரண் ஜோஹர், சஜித் நாடியாவாலா, ஹிரூ யாஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இணைந்து தயாரித்துள்ளனர்.