சினிமா செய்திகள்
பிக்பாஸ் வருண் நடித்த ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ டிரைலர்!
Published
1 year agoon
By
Shiva
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என்றும் திரையுலகில் வாய்ப்புகளைக் குவிக்கலாம் என்ற கனவுடன் பல போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறார்கள் அதில் ஒரு சில போட்டியாளர்களுக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் உறவினரான வருண், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அவர் 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் வருண் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசுக்கு தயாராகியது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் மேனனின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பிக்பாஸ் வருண் நடிப்பு மற்றும் நாயகி ராஹியின் நடிப்பு ஆகியவை இந்த படத்தின் பாசிட்டிவ் அம்சங்களாக பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வருணுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்றும் தமிழ் திரையுலகில் இளைய தலைமுறையின் வெற்றிகரமான நடிகராக வலம் வருவார் என்பது இந்த படத்தின் டிரைலர் இதிலிருந்தே தெரிகிறது என்றும் பலர் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்