சினிமா செய்திகள்
கலைமாமணி விருது மிகப் பெரிய விருது.. யோகி பாபு சந்தோஷம்!

தமிழக அரசு காமெடி நடிகர் யோகி பாபாவுக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.
கலைமாமணி விருதை பெற்ற யோகி பாபு செய்தியாளர்களைச் சந்தித்த போது, “கலைமாமணி விருது மிகப் பெரிய விருது, தமிழக முதல்வர் கையால் எனக்கு வழங்கப்பட்டது. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லா கலைஞர்களுடனும் நிறையப் படங்கள் செய்து வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் ரொம்ப நன்றி” என்று கூறினார்.
கலைமாமணி விருது 1954 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களைப் பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயர் மதிப்பான விருதாகும். 2021-ம் ஆண்டு ஜெயலலிதா விருது என்ற பெயரில் இந்த கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ:
நடிகை சரோஜாதேவி, நடிகை சௌகார் ஜானகி, நடிகை ஜமுனா ராணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ராமராஜன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார், தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகை நித்யா, நடிகை மதுமிதா, இயக்குநர் லியாகத் அலிகான், இயக்குனர் மனோஜ்குமார், இயக்குநர் கௌதம் மேனன், இயக்குனர், நடிகர் ரவி மரியா, வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசையமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் டி இமான், கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், பாடலாசிரியர் காதல் மதி.