செய்திகள்
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் தொடக்கம் – கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்திற்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக மட்டுமே பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 ஆம் தேதி சிதம்பரம் நகராட்சியில் முதல் முகாமை தொடங்கி வைக்க உள்ளார். இதனையடுத்து, ஜூலை 7 முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் தன்னார்வலர்கள் நேரில் சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கும் பணி தொடங்குகிறது.
இந்த திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை மாநிலம் முழுவதும் நடை பெற உள்ளது. மொத்தமாக 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள்
ஊரக பகுதிகளில் 6,232 முகாம்கள்
இந்த முகாம்களில் அரசுத் துறைகளின் பல்வேறு சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
நகர்ப்புறங்களில் 43 சேவைகள்
ஊரகங்களில் 46 சேவைகள்
மேலும், பொதுமக்கள் வருகைக்கு ஏற்ப மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
🔹 தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விவரங்களை பகிர்வர்
🔹 தகவல் கையேடு மற்றும் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்
🔹 கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் முகாம்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்
🔹 விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
🔹 திட்டத்திற்கான பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
இந்த திட்டம் மூலம் மக்களுக்கு அரசு சேவைகள் நேரடியாக அவர்களது வாசஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தமிழக அரசு உறுதி செய்கிறது. அதனால், உங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

