Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்கலாம் — முக்கிய விதிமுறைகள் மற்றும் விலக்குகள்!

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் விண்ணப்பிக்கலாம் — முக்கிய விதிமுறைகள் மற்றும் விலக்குகள்

சிலர் ஓய்வூதியம் பெறுவோர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என நினைத்துள்ளனர். எனினும், தமிழகம் அரசு விதித்த விதிமுறைகள் மற்றும் விலக்குகளை அறிந்தால், ஓய்வூதியதாரர்களும் திட்டத்தின் நலன் பெறலாம்.

தமிழகம் அரசு நிர்ணய விதிமுறைகள் படி, சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் அரசின் பிற ஓய்வூதியங்களை பெறும் குடும்பங்களில் இருந்து விண்ணப்பிக்க முடியாது.

ஆனா, பின்வரும் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன:

✅ இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம்,
✅ முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், மற்றும்
✅ அமைப்புசாராத தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கும் முதியோர் ஓய்வூதியம் —

இந்த திட்டங்களில் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத மற்றும் பிற விதிமுறைகளை பூர்த்திசெய்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, வருவாய்த் துறை வழங்கும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகளைத் தவிர்ந்த பிற உறுப்பினர்களும், திட்டத்தின் பிற தகுதி விதிமுறைகளை பூர்த்திசெய்தால், விண்ணப்பிக்கலாம்.

எனவே, தவறான தகவலால் இதுவரை விண்ணப்பிக்காத ஏழை மற்றும் எளிய குடும்பங்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பலர் ஓய்வூதியம் பெற்றாலேயே விண்ணப்பிக்க முடியாது என தவறாக நினைத்துள்ளனர்.
இந்த தகவலை அறியாத மற்றும் தகுதியான ஏழை மற்றும் எளிய குடும்பங்களில் பகிர்ந்துவையுங்கள் — மாதந்தோறும் ரூ.1000 நிதியளவி வழங்கப்படுகிறது.


J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Strong contextual links.