வைரல் செய்திகள்
800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தெரியும் ஒரிஜனல் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்! எப்போது எப்படி பார்க்கலாம்?

800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய உள்ளது. இந்த நட்சத்திரத்தை எங்கு, எப்போது எப்படி பார்க்கலாம் என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
இயேசு கிறிஸ்து பிறந்த போது வானில் நட்சத்திரம் தெரிந்தது என்பர். அந்த நட்சத்திரத்தை பின்தொடர்ந்து சென்று தான் ஞானியர்கள் குழந்தை இயேசுவைக் கண்டனர். இந்த நிலையில், தற்போது வரும் 21 ஆம் தேதி அதே போலொரு நட்சத்திரம் தெரிய உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இருபெரும் கிரங்கங்களான வியாழன் மற்றும் சனி ஒரே நேர்கோட்டில் நெருங்கி வரும் போது இந்த பிரகாசமான ஒளி வீசும் என்றும், இதுவே பெரிய நட்சத்திரம் போல் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இரு கிரகங்களும் இணையும் நிகழ்வு 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.
ஆனால், கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நட்சத்திர ஒளி தோன்றிய போது பூமியில் தெரியவில்லை. அதற்கு முன்பு 400 ஆம் ஆண்டில் தெரிந்தது. எனவே, கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் 21 ஆம் தேதி கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய உள்ளது.
தெளிவான வானிலை உள்ள பகுதிகளில் யார் வேண்டுமானாலும் இதனைப் பார்க்கலாம் என்றும் வெறும் கண்ணால் கூட பார்க்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


















