கிரிக்கெட்
35 ரன்களில் 3 விக்கெட், சதமடித்து அணியை காப்பாற்றிய பட்லர்!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் ஜோஸ் பட்லர் அபாரமாக சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி வென்று முதலில் பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் அபார பந்து வீச்சு காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 9 ரன்களிலும் மலன் 6 ரன்களிலும் முக்கிய பேட்ஸ்மேன் பெயர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் அவுட்டானார்.
இதையடுத்து 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் என்ற தத்தளித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி காப்பாற்றினார். அவர் 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்ட்ரிகள் என மொத்தம் 67 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் கேப்டன் மோர்கன் 40 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நிமிடங்களில் இலங்கை அணி 164 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.







