வேலைவாய்ப்பு
தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் காலியிடங்கள் 102 உள்ளது. இதில் உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 102
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Assistant Director
காலியிடங்கள்: 13
மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
வேலை: Child Development project Officer
காலியிடங்கள்: 89
மாத சம்பளம்: ரூ.36,900 – 1,16,600
வயது: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி: மனையில் அறிவியல், உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு: 2019 செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO_NEW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2019






















