தமிழ்நாடு
ஜெயலலிதாவை குற்றவாளியாக கருத முடியாது: நீதிபதிகள் அதிரடி கருத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால் அவருக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க கூடாது என சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். அதில் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நினைவிடம் கட்ட அனுமதி அளிக்க கூடாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கின் மீது இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அதில், ஜெயலலிதா மறைந்ததால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக கருத முடியாது. ஆகவே, அரசு சார்பில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை. தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தீர்ப்பளித்து ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.


















