சினிமா
லோகேஷுக்கு எனக்கும் தான் போட்டியே! பாலிவுட் பிரபலத்தை இறக்கிய நெல்சன்; ஜெயிலர் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் ஒரு பக்கம் லியோ படத்திற்கு ஏகப்பட்ட நடிகர்களை ஆன்போர்ட் செய்து விமானத்தில் ஒரு பெருங்கூட்டத்தையே ஏற்றிக் கொண்டு காஷ்மீரில் ஷூட்டிங் செய்து வருகிறார்.
இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை இயக்குநர் நெல்சன் பரபரப்பாக நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ஸ்டேட்டுக்கு ஒரு நடிகர் என்கிற வீதத்தில் ஆட்களை பிடித்து ரியல் பான் இந்திய படத்தை எடுத்துக் காட்டுகிறேன் என சிவராஜ் குமார், மோகன்லால், சுனில் என கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி நடிகர்களை இணைந்து வந்த நிலையில், பாலிவுட்டில் இருந்தும் ஒரு நடிகர் நடிப்பார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

#image_title
நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிகில் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்த படத்தில் ஆன்போர்ட் ஆகி உள்ள அப்டேட்டை தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பிகில் படத்தில் விஜய் ஜட்டியுடன் அடித்து அனுப்புவாரே, அந்த காட்சியில் இருந்து எழுந்து வந்து விட்டாரா என அவரது போஸ்டரை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

#image_title
மேலும், லோகேஷுக்கும் எனக்கும் தான் போட்டியே என பரிதாபங்கள் மீம்ஸை போட்டு அதிக நடிகர்களை வைத்து லோகேஷ் கனகராஜும் நெல்சனும் இயக்கி வருவதை கலாய்த்து வருகின்றனர்.

#image_title
ஏற்கனவே ரஜினிகாந்த் உடன் ஜாக்கி ஷெராஃப் இந்தி படம் ஒன்றில் நடித்துள்ள நிலையில், அந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.