சினிமா
இந்த மாசம் வரை தான் கமலுக்கு டைம்; இல்லைன்னா அந்த ஹீரோவை இயக்க போயிடுவேன்! துணிவு இயக்குநர் அதிரடி?

இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை அடுத்ததாக இயக்குநர் எச்.வினோத் இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால், ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் நடத்தவில்லை என்றும் அதனால் இயக்குநர் எச்.வினோத் பயங்கர கடுப்பில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு என இரு திரைப்படங்களும் கடும் போட்டி போட்டன. வலிமை படமே நல்ல படம் என்று பேட்டியளித்து வந்த வினோத் துணிவு படத்தை தாறுமாறாக லாஜிக்காக எடுத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 புல்லட் வாங்கிட்டேன் என மஞ்சு வாரியர் சொல்லியும் அஜித்தை சுட்டு முதுகில் குத்தி அவர் செல்லும் காரை எரித்து உடனடியாக லாரியை வைத்து இடித்து மலையில் இருந்து வீசப்பட்ட நிலையிலும் ஒன்றுமே ஆகாமல் ஒரு வீட்டிற்குள் அடைக்கலம் தேடி வந்து உயிர் தப்பிப்பார்கள்.

#image_title
அதே போல கடைசி கிளைமேக்ஸில் 50 போட்கள், 4 ஹெலிகாப்டர்கள் அதே மிஷிக் கன்னை வைத்து சுட்டாலும் ஒன்றும் ஆகாமல், பதிலுக்கு அஜித்தும் மஞ்சு வாரியரும் மூச்சு புடித்துக் கொண்டு சுட அத்தனை வெடித்து சிதறுவதும், அத்தா தண்டி புல்லட் அஜித் மீது பாய்ந்தும் சட்டையில் சிகப்பு சாயம் பூசிக் கொண்டு தப்பிப்பது எல்லாமே பார்த்த ரசிகர்கள் இனிமேல் தியேட்டர் பக்கமே வர மாட்டோம் என தலை தெறிக்க ஓடிய நிலையில், வாரிசு படத்துடன் கூட இல்லாமல் வலிமை பட வசூலை கூட நெருங்க முடியாமல் படம் படுத்து விட்டது.

#image_title
இந்நிலையில், இயக்குநர் அ. வினோத் அடுத்து கமல்ஹாசனை இயக்க காத்திருக்கிறார். தனுஷுக்கும் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார்.
ஆனால், கமல் இந்தியன் 2 படத்தில் பிசியாக உள்ள நிலையில், இதுவரை அ. வினோத்துக்கு எந்தவொரு ஏற்பாடும் செய்யவில்லை என்கின்றனர். இந்த மாதம் இறுதி வரை வினோத்தும் வெயிட் பண்ணி பார்க்க முடிவு செய்திருக்கிறாராம். ஆனால், அதையும் தாண்டினால் கமல் படத்தை விட்டு விட்டு தனுஷ் படத்தை இயக்க போயிடுவார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.