சினிமா செய்திகள்
நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயந்தாரா நடித்துள்ள, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெயலர் 2020, அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
2020, மே மாதமே மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது.
தற்போது மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியின் போது நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரெய்லர், நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியின் போது வெளியாக உள்ளது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ள நிலையில், அவருடன் சேர்ந்து என்.ஜே.சரவணன் என்பவரும் இணைந்து இயக்கியுள்ளார்.
வேல்ஸ் ஃபில்ம் இண்டர்னேஷ்னல் சார்பாக ஐஷரி கணேஷ், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

#Nayanthara –
@RJ_Balaji
‘s #MookuthiAmman – Tamil and #AmmoruThalli – Telugu trailers will be launched tomorrow !!!
@DisneyplusHSVIP
























