Connect with us

இந்தியா

பிரதமர் மோடி செப்டம்பர் 2025ல் ஓய்வு பெறப் போகிறாரா அல்லது 2026 தமிழ்நாடு தேர்தல் வரை பதவி நீட்டிக்கப்படுவாரா?

Published

on

பாஜக கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்சிப் பதவிகளோ அரசுப் பதவிகளோ வழங்கப்படக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்சின் எழுதப்படாத சட்டப்படியான மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் மாதம் 75 வயது முடிய உள்ளதால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளாரா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சில நாள்களாக ஊடகங்களில் உலா வருகின்றன.

கடந்தவாரம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு இந்தாண்டு செப்டம்பர் மாதம் 75 வயது நிறைவு பெற உள்ளதால் தாம் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை செய்ய வந்ததாக தகவல்கள் கசிந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இந்தியாவின் அடுத்த பிரதமராக மராட்டிய மாநிலத்தை சார்ந்தவர் தேர்வு செய்யப்பட உள்ளார் என தெரிவித்ததால் அரசியல் களம் பரபரப்படைந்தது.

மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த முன்னால் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் நாக்பூர் பாஜக எம்பியும் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் செப்டம்பரில் ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பிரதமர் மோடியின் பதவிக்காலம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரையோ அல்லது 2029 நாடாளுமன்ற தேர்தல் வரையோ நீட்டிக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்களும் பரவி வருகின்றன.

2029ல் மோடியையே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுப்போம் என தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். பிரதமரை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பையா ஜோஷி தெரிவித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலின் போது 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்களுக்கு போட்டியிட சீட்டு வழங்க வேண்டாம் என பாஜக முடிவெடுத்திருப்பதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். அதன்படி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்கா ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டது நினைவு கூரத் தக்கது.

அடுத்த சில மாதங்களுக்கு இதுவே பேசு பொருளாக இருக்கப் போகிறதா?. போகப் போகத்தான் தெரியும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy vlasy umýt pro nejlepší péči ?. familienaufstellung wien | tobias judmaier, msc. sonic racing : crossworlds.