சினிமா செய்திகள்
‘லியோ’ படத்தில் இருக்கிறாரா அபிராமி? யார் இவர்?

‘பிக் பாஸ்’ புகழ் அபிராமி ‘லியோ’ படத்தில் இருக்கிறாரா என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன் என பலரும் நடித்துக் கொண்டிருக்க கூடிய ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் பரபரப்பாக நடந்து வருகிறது.

Leo
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பிக் பாஸ்’ புகழ் அபிராமி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடனும் கௌதம் மேனன் உடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். காஷ்மீரில் இருந்து வெளியிட்ட இந்த புகைப்படங்களால், அவரும் ‘லியோ’ திரைப்படத்தில் இருக்கிறாரா என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால், ‘லியோ’ படத்தில் அபிராமி இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கான சில போர்ஷன்களின் படப்பிடிப்பை காஷ்மீரில் எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக, அந்த போர்ஷனில் தேவைப்படும் நடிகர்களை காஷ்மீர் வரவைத்திருக்கிறார். அதற்காக தான் அபிராமி காஷ்மீர் சென்றிருக்கிறார். அவர் சிறப்பு அனுமதியோடு ‘லியோ’ படப்பிடிப்பு தளத்திற்கும் சென்றுள்ளார்.
அங்குதான் லோகேஷ் கனகராஜூடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அவர் ‘லியோ’ படத்தில் இருக்கிறார் எனத் தவறான புரிதலுக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் அவர் ‘லியோ’ படத்தில் இல்லை என்ற உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.