வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 2,569 பணியிடங்கள் – டிப்ளமோ & பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் வேலை தேடி காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB) 2025ஆம் ஆண்டுக்கான மொத்தம் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer – JE), டிபோட் மெட்டீரியல் சூப்பிரெண்டு (Depot Material Superintendent – DMS) மற்றும் கெமிக்கல் & மெட்டலார்ஜிகல் அசிஸ்டென்ட் (Chemical & Metallurgical Assistant – CMA) போன்ற பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் தமிழ்நாடு RRB Chennai மண்டலத்திற்காக மட்டும் 160 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
📋 தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதிற்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
💰 சம்பள விவரம்:
மாதம் ரூ. 35,400 (Level 6 Pay Scale) வழங்கப்படும்.
🧾 விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு: ₹500 (CBT-1 தேர்வில் கலந்து கொண்டால் ₹400 திருப்பி வழங்கப்படும்)
SC, ST, OBC, EWS, பெண்கள், திருநங்கைகள், PwBD, சிறுபான்மையினர்: ₹250 (முழுத் தொகையும் CBT-1 தேர்வில் கலந்து கொண்டால் திருப்பி வழங்கப்படும்)
🧪 தேர்வு செயல்முறை:
மொத்தம் நான்கு நிலைகளில் தேர்வு நடைபெறும்:
கணினி வழி தேர்வு – நிலை 1 (CBT-1)
கணினி வழி தேர்வு – நிலை 2 (CBT-2)
ஆவணச் சரிபார்ப்பு (Document Verification)
மருத்துவப் பரிசோதனை (Medical Exam)
🌐 விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
📅 முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025
கட்டணம் செலுத்த கடைசி தேதி: டிசம்பர் 2, 2025
விண்ணப்பத் திருத்தம் செய்யும் காலம்: டிசம்பர் 3 முதல் டிசம்பர் 12, 2025 வரை


















