சினிமா செய்திகள்
சர்ச்சைகளுக்கு நடுவே வைரலாகும் இளையராஜா புகைப்படம்!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற 96 படத்தில் இடம்பெற்ற தனது பாடல்களுக்கு உரிய அனுமதி வாங்கவில்லை, இது ஆண்மையற்ற தனம் என மிக மோசமாக இளையராஜா விமர்சிக்க, சமூக வலைதளங்களில் மீம் கண்டெண்டாகவும், ஸ்டேட்டஸ் போராளிகளின் பொழுதுபோக்கு அம்சமாகவும் இளையராஜா மீண்டும் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில், இளையராஜாவும், எஸ்.பி. பாலாசுப்ரமணியமும் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டு ஆறத் தழுவிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாக ஷேர் ஆகி வருகிறது.
இளையராஜாவுக்கு வயசு ஆக ஆக, அவர் தனது பெருமை இதுபோன்ற அற்பத் தனமான விசயங்களால் இழப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த புகைப்படம், இளையராஜாவின் இமேஜை காப்பாற்ற உதவியாய் அமைந்துள்ளது.





















