கிரிக்கெட்
ஐசிசி சேம்பியன்ஸ் டிரோபி 2025 இறுதி போட்டியில் இந்தியா வென்றால் எத்தனை கோடி பரிசு தொகை கிடைக்கும்?

துபாய்: ஐசிசி சேம்பியன்ஸ் டிரோபி 2025 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், நியூசிலாந்து தென் ஆப்ரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
சேம்பியன்ஸ் டிரோபி 2025 பரிசுத்தொகை விவரம்
ICC சேம்பியன்ஸ் டிரோபி 2025 போட்டிக்கான மொத்த பரிசுத்தொகையாக 6.9 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 60 கோடி இந்திய ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சேம்பியன்ஸ் டிரோபி வென்ற அணி – ₹19.49 கோடி
- இறுதிப் போட்டியில் தோற்ற அணி (ரன்னர்அப்) – ₹9.74 கோடி
- செமி-ஃபைனலில் தோற்ற அணிகள் – ₹4.87 கோடி (ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா)
- குழு கட்டத்தில் 5வது மற்றும் 6வது இடத்தில் முடித்த அணிகள் – ₹3.04 கோடி
- 7வது மற்றும் 8வது இடத்தில் முடித்த அணிகள் – ₹1.21 கோடி
- குழு கட்டத்தில் வென்ற ஒவ்வொரு போட்டிக்கும் – ₹29.5 லட்சம்



