வேலைவாய்ப்பு
IBPS வங்கி தேர்வு 2025 – 13,217 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
IBPS (Institute of Banking Personnel Selection) சார்பில் Regional Rural Banks (RRBs)-இல் உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்ப CRP RRBs XIV தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் குரூப் A அதிகாரி (Officer Scale-I Assistant Manager, Officer Scale-II General Banking Officer, Officer Scale-II Specialist Officer) மற்றும் குரூப் B அலுவலக உதவியாளர் (Office Assistant – Multipurpose) பதவிகள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
📌 கல்வித் தகுதி
Office Assistants (Multipurpose), Officer Scale-I – ஏதேனும் துறையில் இளநிலை பட்டம் (Bachelor’s Degree).
Officer Scale-II General Banking Officer – வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பொருளாதாரம், வேளாண் பொறியியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
Officer Scale-II Specialist Officers (Manager) – Electronics, Communication, Computer Science, IT துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
📌 வயது வரம்பு
Office Assistant (Multipurpose): 18 – 28 வயது.
Officer Scale-I (Assistant Manager): 18 – 30 வயது.
Officer Scale-II General Banking Officer: 21 – 32 வயது.
Officer Scale-II Specialist Officers: 21 – 40 வயது.
📌 தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 2019 முதல், கொங்கணி, கன்னடம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
📌 விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளம் ibps.in-க்கு செல்லவும்.
“Click here to apply online for CRP RRBs XIV” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும்.
எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தின் நகலை சேமித்து கொள்ளவும்.
வங்கிப் பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு IBPS அறிவுறுத்தியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

