Connect with us

உலகம்

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் விற்க முடியுமா? எவ்வளவுக்கு வாங்குவார்கள்?

Published

on

ஆஸ்கர் விருது என்பது திரை உலகினரை பொறுத்தவரை கௌரவமான விருது என்பதும் திரையுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆஸ்கார் விருதை பெற வேண்டும் என்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடின உழைப்பின் மூலம் கிடைத்த ஆஸ்கார் விருதை விற்பனை செய்ய முடியுமா? அப்படியே விற்பனை செய்தாலும் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்ய முடியும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ஆஸ்கர் விருதின் சிலை என்பது தங்கம் மூலம் பூசப்பட்ட வெண்கல சிலை என்பதும் இதை தயாரிக்க ஆஸ்கார் அமைப்புக்கு 400 டாலர் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 400 டாலர் மதிப்பு என்பதைவிட இந்த விருதை பெறும் கலைஞருக்கு கிடைக்கும் புகழ் என்பது விலைமதிப்பில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1951 ஆம் ஆண்டில் அகடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்புதான் இந்த விருதை வழங்க ஆரம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் அதை விற்க முடியுமா என்றால் கண்டிப்பாக விற்க முடியாது. ஒருவேளை ஆஸ்கார் விருதை விற்க விரும்பினால் அவர்கள் மீண்டும் ஆஸ்கார் அமைப்பிடமே கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக ஆஸ்கார் அமைப்பு ஒரு டாலர் மட்டும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருதை விற்பது சட்டவிரோதம் என்றும் அதை விற்பதற்கு அந்த விருதை பெற்றவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது பெற்றவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய வாரிசுகளும் ஆஸ்கர் விருதை விற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆஸ்கார் விருதை விற்கக் கூடாது என்று கூறப்பட்டாலும் சுமார் 150 முதல் 200 விருதுகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் லட்ச கணக்கிலும் கோடிக்கணக்கிலும் அவை விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் பிறகு கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வந்து 1959க்கு பின்னர் ஆஸ்கர் விருதை விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்கார் விருதை திரும்ப ஒப்படைத்தால் பத்து டாலர் கிடைக்கும் என்று ஆஸ்கர் அமைப்பு குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது அது ஒரு டாலராக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் அதை விற்க விரும்பினால் அவர்களுக்கு ஒரு டாலர் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?