டிவி
அர்ச்சனா – பாலா சமாதானம் ஆனது எப்படி?
Published
2 years agoon
By
Tamilarasu
கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா, பாலா இடையில், பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டு வந்தது.
இன்றும் அந்த உரசல் ப்ரோமோவில் தொடர்ந்தது. பின்னர் சமரசம் ஆனது போலவும் ஒரு ப்ரோமோ வெளியானது.
இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் பாலாவை எப்படி அர்ச்சனா சமாதானம் செய்தார் என்பது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், அழுதுகொண்டே பிக்பாஸ் வீட்டின் வெளியே பாலா அமருவது போல வீடியோ வெளியானது.
அதன் பின் நேற்று இரவு, அர்ச்சனா – பாலா இருவரும் சமாதானம் ஆகியுள்ளனர். அதில் பேசும் அர்ச்சனா, உனக்கு என்னை முதல் நாள் முதலே பிடிக்கவில்லை. எனக்குள் இருக்கும் அம்மா, நாம் இழந்து தவிக்கும் பிள்ளையை உனக்குள் தேடிக்கொண்டு இருக்கிறேன். நீங்க அந்த குழந்தையில்லை என்று எனக்கு சொல்லியாச்சி. நான் தள்ளி நிற்கிறேன். எனக்குத் தெரிகிறது உனக்குள் அது இல்லை என்று தெரிகிறது. என்னை வேண்டா, வேண்டா என்று சொன்னால் நான் என்ன செய்வேன். எனக்குப் பிள்ளை வேண்டுமா என்று செண்டிமெண்டாக அர்ச்சனா பேசுகிறார்,
அதைப் பார்த்து மனம் உருகும் பாலா, என்னை மன்னித்து விடுங்கள் என்று கூற, இருவரும் கட்டிப்பிடித்து சமாதானம் ஆகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களே பாருஙகள்.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் சம்பளம் எவ்வளவு?
-
இந்த வாரம் டபுள் எவிக்சன்; வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்!
-
பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா திடீர் விலகல்.. இதுதான் காரணம்!