சினிமா செய்திகள்
இந்திரா காந்தியாக நடிக்கும் ஆளவந்தான் நாயகி!

கன்னட ஹீரோ யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கேஜிஎஃப். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தியாக நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
கமலின் ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரவீணா டாண்டன். மேலும், அர்ஜுனின் சாது படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். கேஜிஎஃப் படத்தில் இந்திரா காந்தியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கால்ஷிட் பிரச்னை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. மேலும், இந்திரா காந்தி கதாபாத்திரத்திற்கு பாலிவுட் பிரபலம் ஒருவரை தேர்வு செய்தால், படத்தின் மார்க்கெட் அதிகரிக்கும் என்ற பேச்சும் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் ரவீணா டாண்டன் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















