சினிமா
வில்லன்களுடன் பலாத்கார காட்சியில் நடிக்கவே பிடிக்காது; ஆளவந்தான் பட நடிகையின் பளிச் பேட்டி!

பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் பலாத்கார காட்சிகளில் நடிப்பது, முத்தக் காட்சிகளில் நடிப்பது, நீச்சல் உடை அணிந்து நடிப்பது போன்ற விஷயங்கள் தனக்கு சுத்தமாக பிடிக்காது என பேசியுள்ள பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரவீணா டாண்டன். தமிழில் அர்ஜுன் உடன் சாது படத்தில் அறிமுகமான அவர், கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் நடித்துள்ளார்.

#image_title
கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென் கதாபாத்திரத்தில் பிரதம மந்திரியாக நடித்திருப்பார். இந்திரா காந்தியை இமிடேட் செய்யும் வகையிலேயே அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கும்.
இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 26ம் தேதி நடிகை ரவீணா டாண்டனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய ரவீணா டாண்டன் பாலிவுட்டில் என்னை பலரும் திமிர் பிடித்த பெண் என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு சினிமாவில் நடிக்க கண்டிஷன் போட்டுருக்கேன் என பேசியுள்ளார்.

#image_title
பலாத்கார காட்சிகளில் நடிக்கவே ஒப்புக் கொள்ள மாட்டேன். ஒரு சில படங்களில் தவிர்க்க முடியாத சூழலில் நடித்துள்ள நிலையில், என் ஆடை கொஞ்சம் கூட கிழியக் கூடாது என்றும் விலகக் கூடாது என்றும் கண்டிஷன் போட்டு இயக்குநர்களையும் நடிகர்களையும் படாத பாடு படுத்தி விட்டேன் என்றார்.
மேலும், முத்தக் காட்சிகளில் நடிக்க ஓகேவே சொல்ல மாட்டேன் என்றும் நீச்சல் உடைகளை அணிந்து கொண்டும் நடிக்க எனக்கு பிடிக்காது, அதன் காரணமாகவே பல பெரிய பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கிறேன் என்றும் ரவீணா டாண்டன் வெளிப்படையாக பேசி உள்ளார்.



















