வணிகம்
கிராஜுவிட்டி கணக்கீடு எப்படி? – ஊழியர்களுக்கான பணிக்கொடை நியமங்கள் முழுமையாக!

ஊழியர்களின் நீண்டகால சேவையை மதிக்கும் வகையில் வழங்கப்படும் முக்கியமான பணிக்கொடையான கிராஜுவிட்டி குறித்து அரசு சட்டப்படி பல விதிமுறைகள் உள்ளன. 5 ஆண்டுகள் தொடர் சேவையை முடித்துள்ள ஊழியர்கள் கிராஜுவிட்டிக்கு தகுதியானவர்கள்.
1972 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பணிக்கொடை சட்டத்தின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து நிரந்தர ஊழியர்களும் இந்த நலத்திட்டத்திற்குப் பரப்பளிக்கப்படுகிறார்கள்.
கிராஜுவிட்டி வழங்கப்படும் சூழ்நிலைகள்:
ஓய்வு பெறும் போது
5 ஆண்டுகள் சேவைக்கு பிறகு ராஜினாமா
முன்கூட்டிய ஓய்வு
சேவைக்காலத்தில் மரணம் அல்லது இயலாமை – இந்த சந்தர்ப்பங்களில் 5 ஆண்டுகள் நிபந்தனை பொருந்தாது
கிராஜுவிட்டி கணக்கீட்டு சூத்திரம்:
Gratuity = (கடைசி அடிப்படை சம்பளம் × சேவை ஆண்டுகள் × 15) / 26
15 – அரை மாத ஊதியம்
26 – மாத வேலை நாட்கள் (ஞாயிறு தவிர்த்து)
உதாரண கணக்கீடுகள்:
9 ஆண்டுகள் மற்றும் 4 மாத சேவை, (9 ஆண்டுகளாக கணக்கிடப்படும்):
₹55,000 சம்பளத்திற்கு 👉 ₹2,85,576
₹75,000 சம்பளத்திற்கு 👉 ₹3,89,423
₹95,000 சம்பளத்திற்கு 👉 ₹4,93,269
6 மாதத்திற்கும் மேலான சேவை ஒரு முழு ஆண்டாக மதிக்கப்படும்.
பணிக்கொடை வழங்க வேண்டியது கட்டாயமா?
ஆம். பணிக்கொடை சட்டத்திற்குள் வரும் நிறுவனங்கள், ஊழியருக்கு பணிக்கொடை வழங்க சட்டப்பூர்வ கடமை உடையவை. இதிலிருந்து விலக முடியாது.
