இந்தியா
ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரி குறைப்பு.. மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் அதை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்ய 28 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது.
மேலும் தனிநபர்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தாபல் மூலமாகவும், கொரியர் மூலமாகவும், இ-காமர்ஸ் தளங்கள் மூல்மாகவும் வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.















