Connect with us

தொழில்நுட்பம்

Gmail-ஐ தாக்கும் விஷமிகள்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை!

Published

on

உலகின் பெரும்பாலான தனிநபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது. இந்நிலையில் அதன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Gmail பயனர்களுக்கு விஷமிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கை தகவலைக் கூகுள் அனுப்பியுள்ளது.

மர்ம விஷமிகள், கூகுள் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாகவும், அதில் கடவுச்சொல்(Gmail Password) உள்ளிட வேண்டும் என்று கேட்கப்படும். அப்போது உன்மை என்ன என்று தெரியாமல் கடவுச்சொல்லை அளித்தால், உங்கள் Gmail தகவல்கள் திருடு போகும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த விஷமிகள் எச்சரிக்கை மின்னஞ்சல் 500 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த மின்னஞ்சல் பெற்றவர்களுக்கு கூகுள் உயர் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதில் இணைபவர்களின் Gmail கணக்குகள் மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

எனவே உங்கள் Gmail-க்கு வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை எப்படி தவிர்ப்பது என்று இங்கு பார்ப்போம்.

பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பெற, தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்க மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது(blocking an email address) மற்றும் மின்னஞ்சல்கள் குழுவிலகுவது (Unsubscribe from mass emails) என்று இரண்டு சேவைகள் உள்ளன.

மின்னஞ்சல் முகவர்களை பிளாக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட முகவரியிலிருந்து எந்த மின்னஞ்சலும் உங்களுக்கு வராமல் தடுக்க முடியும். அடுத்து நாம் சில இணையதளங்களில் பதிவு செய்யும் போது அவர்களது குழு மின்னஞ்சலில் நமது மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்து இருக்கும். அவர்கள் நமது மின்னஞ்சல் விவரங்களைக் காசுக்காக விற்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இப்படி உங்களுக்குத் தேவையில்லாத சேவைகளிலிருந்து வரும் குழு மின்னஞ்சல்களிலிருந்து விலக வேண்டும்.

இவற்றைச் செய்த பிறகும், உங்கள் மின்னஞ்சல் முகவரி தொடர்ந்து விஷமிகளின் தாக்குதலுக்கு உள்ளானால் அது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்,

எப்படி மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கை திறக்கவும்.
படி 2: உங்களுக்கு வந்த தேவையில்லா மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: உங்கள் மின்னஞ்சல் கணக்கின் வலது புறத்துக்கு மேலே உள்ள, மேலும் என்ற பொத்தனை கிளிக் செய்து, Block என்பதை தேர்வு செய்யவும். ஒருவேலை தவறாக பிளாக் செய்துவிட்டால் அவர்களை தேவைப்பட்டால் unblock-ம் செய்துகொள்ளலாம்.

குழுவிலகுவது எப்படி?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கைத் திறக்கவும்.
படி 2: குலுவிலகுவதற்கான மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: பின்னர் அந்த மின்னஞ்சலில் உள்ள Unsubscribe அல்லது Change preferences என்பதை கிளிக் செய்து குழுவிலிருந்து விலகிவிடலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்16 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா16 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
公司 開單系統.