வணிகம்
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 18 மாத அகவிலைப்படி நிலுவை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு!

அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி? 18 மாத அகவிலைப்படி அரியர் குறித்து தகவல்
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தப் பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) நிலுவைத் தொகையை வழங்கும் முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 மாத அகவிலைப்படி வழங்கப்படும் தொகை எவ்வளவு?
- லெவல் 1 பணியாளர்கள்: குறைந்தது rs. 11,800 முதல் அதிகபட்சமாக rs.37,554 வரை.
- லெவல் 13 பணியாளர்கள்: rs. 1,44,200 முதல் rs.2,18,200 வரை.
- லெவல் 14 ஊழியர்கள்: rs. 1,82,200 முதல் rs. 2,24,100 வரை.
இந்த தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தின்படி மாறுபடும்.
அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க கோரிக்கை
கொரோனா தொற்றின் போது, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் நிறுத்தப்பட்டிருந்தது. இதை மீண்டும் வழங்குமாறு அரசு ஊழியர்களும் சங்கங்களும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
NC JCM செயலாளர் கோபால் மிஸ்ரா எழுதிய கடிதத்தில், “நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 18 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு?
இந்த முறை பட்ஜெட்டில், 18 மாத கால அகவிலைப்படி நிலுவை தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.
மோடி அரசின் இந்த முடிவு கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். இது ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய மாற்றமாகும்.



