வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: ஓய்வூதியமும் பணிக்கொடையும் தடை செய்யப்படும் புதிய விதி அமல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சி விதி – ஒழுக்க குறைபாடு இருந்தால் ஓய்வூதியமும், பணிக்கொடை தான் பறிகொல்கிறது!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளைப் பற்றிய முக்கியமான விதிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது. தற்போது முதல், ஓய்வூதியம் பெறுவதற்கு முன் அல்லது பெற்ற பிறகும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அந்த ஊழியருக்கு பென்ஷன் மற்றும் கிராஜுவிட்டி வழங்கப்படாமல் நிறுத்தப்படும்.
எப்படி இது செயல்படும்?
2021-ல் திருத்தம் செய்யப்பட்ட CCS (Pension) விதிகளின் கீழ், ஒரு ஊழியர் பணிக்காலத்தில் அலட்சியம், ஒழுக்கமின்மை அல்லது குற்றச்சாட்டு சந்தித்தால், அவரது ஓய்வூதியத்தை பகுதியளவு அல்லது முழுமையாக அரசு நிறுத்தலாம்.
யாருக்கு இந்த விதி பொருந்தும்?
இந்த புதிய விதி மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும். ஓய்வு பெற்ற பின் ஒரு ஊழியர் பணிக்காலத்தில் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் பெற்ற பணம் திரும்ப பெறப்படும்.
முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு?
இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் சம்பந்தப்பட்ட துறை செயலாளர், நியமன ஆணையர் அல்லது CAG-க்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த முடிவையும் எடுக்கும் முன் UPSC-யின் ஆலோசனை கட்டாயமாக பெறப்படுகிறது.
பிரதான அம்சங்கள்:
ஒழுக்கமின்மை இருந்தால் ஓய்வூதியம் நிறைவு
7வது ஊதியக்குழு விதிகள் படி நடவடிக்கை
துறை ரீதியான விசாரணை அல்லது நீதிமன்ற தீர்ப்பு இருந்தால் இது நடைமுறைக்கு வரும்
பணியாளர்களை பொறுப்புடன் செயல்பட வைக்கும் நோக்கத்தில் அரசு இம்மாற்றத்தை கொண்டுவந்துள்ளது
மத்திய அரசு ஊழியர்கள் இப்போது மிகவும் கவனமாக, ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அரசு வழங்கும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்ற நிதிச் சலுகைகள், இனிமேல் 100% நேர்மையான சேவை வழங்குபவர்களுக்கே மட்டுமே வழங்கப்படும் என்பதை அரசு வலியுறுத்தியுள்ளது.

















