வணிகம்
கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!
Published
8 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தங்க நகை அடமானத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,000 மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இருந்து கூட்டுறவு வங்கிகளில் தங்க அடமானக் கடனுக்கு ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வரை கடன் வழங்கப்படும். இந்த உயர்வு பொதுமக்களுக்கு நிதி ரீதியான பெரும் நிவாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேலும், இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மட்டுமே
சுமார் 42 லட்சம் பேருக்கு ₹45,000 கோடி மதிப்பிலான நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.












