வீடியோ
வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி படத்தின் க்ளிம்ஸ் எனும் 35 நொடி வீடியோ நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோமாளி படத்தில், ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு காமெடி ரோலில் கலக்கியுள்ளார்.
இந்த குட்டி வீடியோவில் இந்த படம் 90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ்களுக்கு சமர்ப்பணம் என்ற ரீதியில் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கரணின் ஸ்ரூவ் மியூக் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.















